தூத்துக்குடி வாகைக்குளம் பகுதியை சேர்ந்த 11 -ம் வகுப்பு படித்து வரும் மாணவி அருகில் உள்ள முடிவைத்தானேந்தல் பகுதிக்கு அடிக்கடி சென்று சாமி கும்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த கோவிலில் ராஜி என்பவர் பகுதி நேர பூசாரியாக இருந்து வந்துள்ளார்.கோவிலுக்கு எவரேனும் பக்தர்கள் வருகை புரிந்தால் அந்நேரங்களில் பூஜை செய்வதை இவர் வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் அப்பா வயசு இருக்கும் அந்த நபர் பல ஜோக்குகளை கூறி பெண்ணிடம் நெருங்கி பழகியுள்ளார்.பின்னர் சிறுமியிடம் நெருக்கமான பின்னர் சிறுமியின் குடும்பத்தின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.
சிறுமியின் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லாத காரணத்தால் கோவிலுக்கு சென்று வரும் நேரங்களில் பூசாரியின் வீட்டிற்கு சென்று நிகழ்ச்சி பார்த்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் அந்த பூசாரி ஒரு நாள் மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்துள்ளார்.இதை அறியாமல் அந்த சிறுமி அந்த பானத்தை வாங்கி பருகியுள்ளார்.பின்னர் அந்த பூசாரி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சிறுமிக்கு தெரிய வர இங்கு நடந்ததை யாருக்கும் சொல்ல கூடாது அவ்வாறு கூறினால் உன் படைப்பு கெட்டுவிடும் என்று கூறி மிரட்டியுள்ளார்.பின்னர் சிறுமி எப்போதெல்லாம் கோவிலுக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் சீரழித்துள்ளார்.
இதன் காரணமாக சிறுமியின் வயிறு பெரிதாகி கொண்டே சென்றுள்ளது.ஆனால் பெற்றோருக்கு உண்மை தெரியாததால் பல வயிற்று வலி மாத்திரையை வாங்கி கொடுத்துள்ளனர்.இதன் காரணமாக சிறுமிக்கு வயிற்று வலி அதிகமாகி 6 மாத சிசு வீட்டிலேயே இறந்து பிறந்துள்ளது.
பின்னர் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் யாருக்கும் தெரியாமல் அந்த குழந்தையின் உடலை வீட்டின் பின்புறம் புதைத்துள்ளார்.யாரோ ஒருவரின் தகவலின் அடிப்படையில் இந்த சம்பவம் காவல்துறையினருக்கு தெரியவர அவர்கள் பூசாரி ராஜி யை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…