கருக்கலைப்பிற்கு உரிய அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்க அரசு மருத்துவமனைகளில் தனி வாரியம்..!

கருக்கலைப்பிற்கு உரிய அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்க அரசு மருத்துவமனைகளில் தனி வாரியம் அமைக்க அரசாணை
கருக்கலைப்பிற்கு உரிய அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்க அரசு மருத்துவமனைகளில் தனி வாரியம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கருக்கலைப்பு செய்வதற்கு வகுக்கப்பட்ட சட்டத்தின் கீழ் தனி வாரியம் அமைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கருக்கலைப்பிற்கான கருத்துக்களை 3 நாட்களுக்குள் வாரியம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. உரிய காரணம் இல்லாவிட்டால் கருக்கலைப்பு விண்ணப்பத்தை நிராகரிக்க வாரியத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 32 அரசு மருத்துவமனைகளில் தனித்தனியான கருக்கலைப்புக்கான வாரியம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, மதுரை ராஜாஜி மருத்துவமனைகள் இதில் அடங்கும். பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் உறுப்பினர்களாக வாரியத்தில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025