சென்னை துறைமுகம் விளையாட்டு மைதானம் அருகே சடலம் ஒன்று கிடப்பதாக, அப்பகுதி மக்கள் புது வண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்க வந்த போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது சடலமாக கிடந்தவர், திருவொற்றியூர் சாத்தாங்காடு மேட்டு தெருவைச் சேர்ந்த 50 வயதுடைய சேகர் எனவும், இவர் கற்பூர வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது.
பின்னர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் , தவறான உறவு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும், பின்னர் விசாரணையின் போது மகளின் தோழியான 22 வயது பெண்ணுக்கும், சேகருக்கும் இடையே 5 ஆண்டுகளுக்கு முன் பழக்கம் இருந்துள்ளது. ஆனால் அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் காதல் ஏற்பட்டு, இருவீட்டாரும் திருமணம் பேசி முடித்துள்ளனர்.
இந்நிலையில், சேகர் தன்னுடன் அந்த பெண் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை காட்டி, குடும்பத்தினரை சேகர் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. பிறகு சேகரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அந்த பெண்ணுடன் அடையாறு சென்றுள்ளார். அப்போது வழக்கமாக அவர்கள் சந்திக்கும் விளையாட்டு மைதானம் அருகே வந்து சேகரை, அந்த பெண் கண்களை மூடச் சொல்லியுள்ளார்.
அப்போது, பெவி குயிக்கை எடுத்து சேகரின் கண்ணில் கொட்டிய இளம்பெண், கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த பெண்ணை பிடித்துள்ள போலீசார், இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…