இலங்கை தமிழர்கள் அகதிகளோ, அனாதைகளோ அல்ல. நாங்கள் இருக்கிறோம். இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் உள்ள 106 முகாம்களில் இலங்கை தமிழர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்ட அடிக்கல் நாட்டினார். வேலூரில் அருகே மேல்மொனவூரில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமில் நடந்த விழாவில், இலங்கை தமிழர்களுக்காக முதல்கட்டமாக ரூ.142.16 கோடி செலவில் 3,510 புதிய வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டினார். மேலும், மறுவாழ்வு முகாம்களில் ரூ.30 கோடி மதிப்பிலான இதர அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
மேலும் பி.இ மாணவி ஒருவருக்கு இலவச கல்விக்கான முழு கல்வி கட்டண காசோலையை முதல்வர் வழங்கினார். மேலும், அங்கு இலங்கை தமிழர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் அவர்கள், தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் ஒருதாய் மக்களே; கடல் தான் நம்மை பிரிக்கிறது. இலங்கை தமிழர் விட்ட கண்ணீர் மறக்க முடியாது. இலங்கை தமிழர்கள் அகதிகளோ, அனாதைகளோ அல்ல. நாங்கள் இருக்கிறோம். இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல. என்னை உங்களின் சகோதரனாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…