அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம் அவரது சொந்த பணி மற்றும் தொழில் காரணமாக கட்சிப் பணியில் ஈடுபட இயலாமல் இருப்பதால் அவர் வகித்து வந்த முதன்மை துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்பட்டு மாநில மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் இன்று முதல் மாநில முதன்மை துணைச் செயலாளராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்திய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு தெற்கு மண்டல நிர்வாகிகள் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியினர் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில முதன்மை துணைப் பொதுச் செயலாளர் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திறம்பட கட்சி பணிகளை சிறப்பாகவும், உத்வேகத்துடனும் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையில் இருந்து விலகி தன் கணவரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு ஆதரவாக முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாக ராதிகா அண்மையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…