திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வணக்கம் சோமு. இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளராக இருந்த இவர் ஏற்கனவே திருமணம் ஆன நிலையிலும் ஒருதலைக்காதலின் விளைவாக திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி உதவிப் பேராசிரியையை கடந்த 2019 செப்டம்பர் மாதம் 30 தேதி இவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆம்புலன்ஸ் காரில் கடத்தினார். இந்த கடத்தல் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சீர்மிகு காவல்துறையினர் அந்த ஆம்புலன்ஸ் காரை தேடிச் சென்றனர். இதை அறிந்த அந்த கும்பல் திருச்சி – திண்டுக்கல் சாலையில் மணப்பாறை அருகே அந்த உதவி பேராசிரியையை சாலையோரம் இறக்கி விட்டு விட்டு அந்த கடத்தல் கும்பல் தப்பித்தது. இந்த கடத்தல் வழக்கை விசாரித்த காவல்துறையினர் வணக்கம் சோமுவின் கூட்டாளிகள் தஞ்சையை சேர்ந்த ஜெயபால், அலெக்ஸ், ஞானபிரகாஷம், விக்னேஸ்வரன், விஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் வணக்கம் சோமு மட்டும் காவலர்கள் பிடியில் சிக்காமல் தலைமறைவாகவே இருந்தார். இந்நிலையில் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு தலைமறைவாக இருந்த அவரை அதிமுக தலைமை, பகுதி பொருளாளர் பதவியில் இருந்து நீக்கியது அதிமுக தலைமை. மேலும் அவரை, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கியது. அவரது ஜாமீன் மனுகளும் நீதிமன்றத்தால் தள்ளுபடியான நிலையில் 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த அவர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் இன்று காலை சரணடைந்துள்ளார். இவரை காவல்துறையினர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை வரும் ஏப்ரல் 9ம் தேதி வரை சிறையில் அடைக்கும் படி நீதிபதி உத்தரவிட்டார். பல்வேறு மாநிலங்களில் தலைமறைவாக இருந்த காரணத்தால் இவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…