தவறு செய்தால் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடையத்தான் செய்யும்! அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பளீர்!

Published by
மணிகண்டன்

வேலூரில்  பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தலைவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். திமுக தலைவர் முக.ஸ்டாலின், வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள மண்டபத்தில் உரிய அனுமதியின்றி கூட்டம் நடத்தியதால், கூட்டம் நடைபெற்ற மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இது குறித்தும் இன்னும் சில நிகவுகளை குறித்தும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘ தேர்தல் நடக்கும் வேளையில் 10 பேர் கொண்ட கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றாலே அனுமதி வாங்கவேண்டும். அப்படி இருக்க, ஒரு கட்சியின் தலைவரே கலந்துகொள்ளும் கூட்டம் அனுமதி பெறாமல் நடைபெற்றால் அந்த மண்டபத்திற்கு சீல் தான் வைப்பார்கள். திமுக சொன்னாலும் அரசும், மக்களும் அப்படியே கேட்டு கொள்ளவேண்டுமா?! யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும்.

அதிமுகவை சேர்ந்தவர்கள் தவறு செய்தாலும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடையும், அதே போல திமுகவினர் தவறு செய்தாலும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடையதான் செய்யும். எடப்படியார் ஆட்சி அப்படித்தான் இருக்கும்.’ என தெரிவித்தார்.

சமீபகாலமாக தமிழக காவல்துறையில் விசாரணையில், பலரும் பத்ரூமில் வழுக்கி விழுந்து வலது கை உடைந்துவிடுகிறது. இது தொடர்பாக பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Recent Posts

கோவையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.!

கோவையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.!

கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.  இன்று (ஜூலை 7,…

3 minutes ago

தமிழ்நாடு பிரீமியர் லீக்.., முதல்முறை கோப்பை வென்ற திருப்பூர் அணி.!

சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…

59 minutes ago

“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…

1 hour ago

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. மகளிர் உரிமைத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பம்.!

சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…

2 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!

பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…

2 hours ago

அரோகரா.. அரோகரா.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது மகா கும்பாபிஷேகம்..!

தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…

2 hours ago