முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுக நிர்வாகிகளுடன் 4வது நாளாக இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கட்சி வளர்ச்சி, மாநகராட்சி, நகராட்சி தேர்தல் குறித்து ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் காலையிலும், மாலையிலும் என இரு நேரங்களில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காலையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கோவை மாநகர், கோவை புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், தேனி, அரியலூர், தர்மபுரி, ஆகிய 7 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கே.பி. அன்பழகன், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதனிடையே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதை முன்னிட்டு தமிழக முதல்வருக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், கட்சித் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…