தமிழகத்தில் விவசாய மின் இணைப்பை எங்கு வேண்டுமானாலும் மாற்றலாம்.
தமிழகத்தில் விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு இருந்த நடைமுறைச் சிக்கல்களை தற்பொழுது எளிமையாக்கி தாமதமின்றி விவசாயிகள் பயன் பெறக்கூடிய வகையில் தமிழ்நாடு மின்சார வழங்கல் மற்றும் பகிர்மான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் குறைந்தபட்சம் அரை ஏக்கர் நிலம் வைத்துள்ளவர்கள் கிணறு மற்றும் நிலத்தின் உரிமத்தை கிராம அலுவலரிடம் பெற்று இணைத்தால் அதுவே போதுமானது.
விவசாய மின் இணைப்பினை தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம், காரணம் எதுவும் தெரிவிக்க தேவையில்லை. நிலம் மற்றும் கிணறு இருந்தால் மின் இணைப்பு மாற்றம் செய்ய அனுமதிக்கப்படும். 15 நாட்களுக்குள் அனுமதி கிடைக்கவில்லை என்றால் விவசாய அவசர நிமித்தம் காரணமாக முறை மாற்ற திறப்பானை இயக்கிக் கொள்ளலாம். மின் இணைப்பு பெற தயார் நிலையை தெரிவிக்க மூன்று நாட்களுக்குள் மின் இணைப்பு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…