திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு எதிரான மூன்று பேரும் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்றும் உறுதியாகக் கூறுகிறேன்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், புதுடெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை திசைதிருப்புவதற்காக தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடி வரப்புயர நீர் உயரும் என்று ஒளவையின் பாடலைப் பாடி விவசாயிகளுக்கு செய்த பாவத்தை திசைதிருப்ப பார்க்கிறார்.
தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சி மாறப்போகிறது என்று நாம் காணும் காட்சிகள் சாட்சியாக இருந்தாலும், இன்று இங்கு நான் காணும் காட்சிகள் தான் அந்த காட்சிகளை எல்லாம் உறுதி செய்வதாக உள்ளது என தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளை பாதுகாப்பை உறுதி செய்கிறேன் என்றும், திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு எதிரான மூன்று பேரும் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்றும் உறுதியாகக் கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இதுதொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானங்கள் திருப்பி பெறப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…