Edapadi palanisamy [Image source : EPS]
அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நாளை மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை வலையன்குளம் ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றப் பிறகு நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும்.
அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக தங்களின் பலத்தையும், செல்வாக்கையும் காட்டும் வகையில் மாபெரும் மாநாடாக இந்த எழுச்சி மாநாட்டை நடத்த திட்டமிடபட்டுள்ளது. மதுரை விமான நிலையம் பின்புறம் 65 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் இடத்தில் பின்புறம் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு, வீடியோ காட்சிகள் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவம் பொறித்த பிரமாண்ட நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்து கண்காட்சி மற்றும் நவீன தொழில்நுட்ப மூல வீடியோ காட்சி ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு கிட்டத்தட்ட 20 லட்சம் தொண்டர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை, நடைபெறும் மாநாட்டிற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. நேற்று இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரயில் இன்று மதுரை வந்தடைந்துள்ளது. இந்த நிலையில், மாநாட்டில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை வந்தடைந்தார். அவருக்கு அதிமுக சார்பில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…