mk stalin - DindigulSrinivasan [File image]
அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு எதிராக அதிமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அவர் பேசியதாவது, விலைவாசி உயர்வால் பாதிப்படையும் மக்கள் திமுகவுக்கு தெரியாமல் வாக்களித்துவிட்டோம் என கூறுகின்றனர்.
தற்போது, இந்த விலைவாசி உயர்வால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மகளிருக்கான அணைத்து சலுகைகளையும் முடக்கியுள்ளதாக குறிப்பிட்டார். அந்தவகையில், மீண்டும் இப்போது தேர்தல் நடந்தால் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைத்து ஸ்டாலினை மீண்டும் முதல்வர் ஆக்குவோம் என்று கூற மேடையில் சலசலப்பு ஏற்படவும்.
பின்னர், அருகில் உள்ளவர்கள் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி சொல்றதுக்கு பதிலா ஸ்டாலினு சொல்லிட்டிங்கனு சொல்ல…. உடனே பதறி போன சீனிவாசன், அய்யய்யோ, வார்த்தை தவறாக வந்துவிட்டது, ஒரு வேகத்துடன் பேசும்பொழுது வார்த்தையில் பிழை ஏற்பட்டது என இன்று அதிமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் இவ்வாறு பேசினார்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…