வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் நகர பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி தலைவியாக இருந்தவர் நிர்மலா.இவர் தனது கணவரை இழந்த பின்பு தனது தாயுடன் அரக்கோணம் அருகில் உள்ள சின்னகைனூரில் வசித்து வருகிறார்.
தினமும் காலையில் எழுந்தவுடன் இவர்கள் வெளியில் வந்து அக்கம்பக்கத்தினரிடம் பேசுவது வழக்கம்.ஆனால் இவர்கள் சமீபத்தில் வெகுநேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது நிர்மலா ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.அவரின் அருகில் ஒரு அம்மிக்கல்லும் ரெத்தக்கறையுடன் இருந்துள்ளது.அவரின் தாய் காயங்களுடன் மயக்கம் அடைந்த நிலையில் இருந்துள்ளார்.
இதன் காரணமாக காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நிர்மலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
பின்பு அவரின் தாயாரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.இந்த கொலை சம்பவம் காரணமாக மூன்று தனிப்படை பிரிவினரை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…