அதிமுக, திமுகவுக்கு மாற்றாக அமமுக வரும் – டிடிவி தினகரன்

திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு ஆற்றில் கூட மண் இருக்காது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருவிடைமருதூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக, திமுகவுக்கு மாற்று கட்சியாக அமமுக வரும். ரூ.1000, ரூ.1,500 தருவோம் என ஏலம் போடுகிறார்கள். ஆனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என குற்றசாட்டியுள்ளார். எங்களால் செய்ய முடிந்தவற்றை, சொல்கிறோம். மற்றவர்களை போல் பொய் சொல்லவில்லை என கூறியுள்ளார்.
மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு ஆற்றில் கூட மண் இருக்காது என்று விமர்சித்துள்ளார். சமீபத்தில் கரூர் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அத்தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாட்டுவண்டி உரிமையாளர்கள் மணல் அள்ளலாம். அதை அதிகாரிகள் யாரும் தடுக்க மாட்டார்கள். அப்படி தடுக்கும் அதிகாரிகள், இங்கே பணியாற்றமாட்டார்கள் எனவும் அவர் கூறியது சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025