சரிந்த திமுக இமயத்தின் சரித்திரம்… பேரா., க.அன்பழகன் குறித்த சிறப்புத் தொகுப்பு…

Published by
Kaliraj

அறிஞர் அண்ணா தொடங்கி கலைஞர் , ஸ்டாலின் என மூன்று தலைமைகளுடன் பணியாற்றிய பேராசிரியரும் திமுக பொதுச்செயலாளருமான க. அன்பழகன் இன்று மறைந்து விட்டார் என்ற செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய்யுள்ளது. இவரை பற்றிய சிறப்பு தொகுப்பு…

பிறப்பு:

திமுக பொதுச்செயலாளர்  க. அன்பழகன் அவர்கள் திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். கல்யாணசுந்தரனார் மற்றும் சுவர்ணம்பாள் தம்பதியருக்கு டிசம்பர் 19ம் தேதி, 1922 ம் ஆண்டு பிறந்தார். இவர் இயற்பெயர் ராமையா.

கல்வி:

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை  தமிழ் (ஹானர்ஸ்) பட்டம்  படித்தார்.பின்  1944-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றினார்.

குடும்பம்:

 இவர், 1945-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி வெற்றிச்செல்வி என்பவரை தனது  வாழ்க்கை துணையாக ஏற்று திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு அன்புசெல்வன் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி வெற்றிச்செல்வி மறைவிற்கு பிறகு சாந்தகுமாரி என்பவரை இரண்டாவதாக மணந்தார். இவர்களுக்கு புருஷோத்தமராஜ், ராஜேந்திரபாபு என்ற இரு மகன்களும், ஜெயக்குமாரி எனும் மகளும் உள்ளனர்.

திராவிட வழியில் அன்பழகன்:

ஆன்பழகன் திராவிட சிந்தனைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதனால், தனது ராமையா என்ற தனது பெயரை அன்பழகன் என மாற்றிக்கொண்டார். கல்லுாரியில் பணிபுரிந்தபோதும், இயக்கப்பணிகளை தொடர்ந்தார். அன்பழகன், முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார்.

வகித்த பதவிகள்:

  • 1957-ம் ஆண்டு முதல் 1962-ம் ஆண்டு வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக(எம்.எல்.சி.) இருந்தார்.
  • 1967-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டு வரை நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினராக இருந்தார்.
  • 1971-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரை புரசைவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும்,
  • 1984-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை பூங்காநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும்,
  • 1989-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும்,
  • 1996-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றினார்.
  • 1971-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரை கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் சமூகநலத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
  • 1989-1991, 1996-2001 தி.மு.க. ஆட்சியின் போது கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டார்.
  • 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நிதித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
  • 1977-ம் ஆண்டு தி.மு.க. பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
  • கடைசியாக 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட அவர், தோல்வியை தழுவினார்.

எழுத்தாளராக பேராசிரியர்:

  • சிறந்த எழுத்தாளராக பல தமிழ் சமூக கட்டுரைகளையும், நூல்களையும் க.அன்பழகன் எழுதி உள்ளார்.
  • இன-மொழி வாழ்வுரிமை போர்,
  • உரிமை வாழ்வு,
  • 1956,
  • பாரி நிலையம்,
  • தமிழர் திருமணமும் இனமானமும்,
  • தமிழின காவலர் கலைஞர்,
  • தமிழ்வானின் விடிவெள்ளி தந்தை பெரியார் உள்பட பல நூல்களை அவர் எழுதி உள்ளார்.

    இவரது மறைவு தி.மு.க., தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களிடையே மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Recent Posts

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

17 minutes ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

44 minutes ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

1 hour ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

2 hours ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

3 hours ago

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

11 hours ago