அண்ணாமலை : நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாநில தலைவர் அண்ணாமலை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்ததை தொடர்ந்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தேர்தலில் தோல்வி அடைந்தது பற்றியும், நாம் தமிழர் கட்சியை பாராட்டியும் பேசியுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த போது அண்ணாமலை பேசியதாவது ” இந்த தேர்தலில் தோல்வி அடைந்ததை நான் தோல்வியாக பார்க்கவில்லை. வரும் 2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும்” என்று கூறினார்.
மேலும், தொடர்ந்து பேசிய அவர் ” அரசியல் ரீதியாக எங்களுடைய இரண்டு கட்சிகளுக்கு எதிர் சித்தாந்தம் கொண்டிருந்தாலும் நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை பாராட்டுகிறேன். பணம் கொடுக்காமல் வாக்கு வாங்கியதற்காக நாம் தமிழர் கட்சியை நான் பாராட்டுகிறேன். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி நேர்மையாக நின்று இருக்கிறார்கள்.
தமிழக அரசியலில் அவர்கள் நேர்மையாக வாக்கு வாங்கிய காரணத்தால் நான் இந்த நேரத்தில் அவர்களை பாராட்டி தான் ஆகவேண்டும். சுயேட்சை சின்னத்தில் நின்று வாக்குகளை பெற்றுள்ளனர். நாம் தமிழருக்கு கிடைத்த வாக்குகள் திராவிட சித்தாந்தத்தை விட்டு மக்கள் வெளியே வருகிறார்கள் என்பதற்கு சாட்சி” எனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…