சென்னை: மக்களவை தேர்தல் தோல்வி குறித்து இன்று முதல் வரும் ஜூலை 16ஆம் தேதி வரையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த உள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கட்சி இதுவரையில் சந்தித்த தேர்தல்களில் பெரும்பாலும் தோல்வியயே தழுவி வருகிறது. 2019 மக்களவை தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற அதிமுக இந்த முறை 2024 தேர்தலில் 34 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு […]
டெல்லி: மக்களவை தேர்தலில் காங்கிரஸ் செயல்பாடு குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மக்களவை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கும், INDIA கூட்டணிக்கும் தோல்வியை தந்தாலும், காங்கிரஸ் கட்சி கடந்த இரு தேர்தல்களை விட அதிக இடங்களை கைப்பற்றி ஓரளவு நம்பிக்கையை கொடுத்தது. கடந்த இரு முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாமல் இருந்த காங்கிரஸ் கட்சி, இந்த முறை எதிர்க்கட்சி அந்தஸ்த்தில் அமர உள்ளது. அந்த […]
சென்னை : நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை வெற்றியை பெற முடியவில்லை. அதனால், கூட்டணி ஆதரவுடன் மீண்டும் பாஜக ஆட்சியமைக்க உள்ளது. இந்த நிலையில், கருத்துகணிப்பு மக்களை முட்டாளாக்கியது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய ப.சிதம்பரம், “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தவறானது. கருத்துக் கணிப்பு அனைத்தையும் ஒரே இடத்தில் தயாரித்து ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்டது. கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் பாஜக 350 இடங்கள் பெறும் […]
கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை மக்களவை தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி திமுக வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். இதனை அடுத்து சிலர் ஆடுகளை வெட்டி அதனை வீடியோ , புகைப்படங்களாக எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். இன்று பிற்பகல் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், வாயில்லா ஜீவன் உங்களை என்ன செய்தது.? என்மீது கோவம் என்றால் என்னை என்ன வேணும்னாலும் செஞ்சிக்கோங்க. நான் இங்கே […]
எஸ்.பி.வேலுமணி: நடந்து முடிந்த இந்த மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் அதிமுக 3-வது இடத்தில் வகித்து தோல்வியையும் தழுவியது. தற்போது, அதிமுக அமைச்சரான எஸ்.பி.வேலுமணி கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசிய போது,”அரசியல் தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம் தான், ஆனால் அண்ணாமலை கொஞ்சம் அதிகமாகவே பேசி விட்டார். வாக்கு சதவீதம் ஏன் குறைந்தது என்பதை ஆய்வு செய்து அதனை சரி செய்ய முயற்சிக்க வேண்டும். அதை விட்டு விட்டு 2 ஆம் கட்ட […]
அகிலேஷ் யாதவ்: நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளில் பாஜகவின் கோட்டையான யூ.பியில் அதிக இடங்களில் தோல்வியுற்று அதிரிச்சியளித்திருந்தது. இதனை தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் பாஜகவின் தோல்வியை குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசி இருக்கிறார். அவர் கூறுகையில், “பல இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தோம் ஆனால் வெல்ல முடியாமல் போனது அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், யூபியில் பல இடங்களில் மக்கள் பாஜக மீது நம்பிக்கை இல்லாமல் தோற்கடித்து […]
டெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. இதற்கான அரசியல் கட்சி ரீதியிலான நடவடிக்கைகளை ஆளும் கட்சி மேற்கொண்டு வருகிறது. அதே போல புதிய அரசு தொடர்பான வேளைகளில் மக்களவை செயலகம் ஈடுபட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமயிலான 17வது அமைச்சாராவை கலைக்க பரிந்துரையானது குடியரசு தலைவரிடம் இருந்து மக்களவை செயலகத்திற்கு கிடைப்பெற்றுள்ளதாகவும், அடுத்தகட்டமாக புதிய எம்பிக்கள் பதவி ஏற்க ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் 17ஆம் தேதி பதவி […]
டெல்லி: மக்களவை தேர்தல் நிறைவடைந்து பாஜக தலைமையிலான NDA கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்க உள்ளது. கடந்த 2 முறைகளை போல அல்லாமல் இந்த முறை மத்தியில் கூட்டணி ஆட்சி நடைபெற உள்ளது. நேற்று அதற்கான பேச்சுவார்த்தைகள் டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நிறைவுபெற்றன. இதனை தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரி நாளை மறுநாள் (ஜூன் 8) பதவி ஏற்பு விழாவை நடத்த பாஜக தலைமை திட்டமிட்டு வருகிறது. இதற்காக மற்ற […]
டெல்லி: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கடந்த 2014, 2019 தேர்தல்களில் வென்ற இடங்களை விட குறைவான இடங்களையே வென்றுள்ளது. கடந்த இரு முறையும் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றிய பாஜக, இந்த முறை கூட்டணி ஆட்சியை அமைக்கும் வேளையில் மும்முரமாக களமிறங்கியுள்ளது. இந்த சரிவு குறித்து, பாஜக தேசிய தலைமை இன்று டெல்லியில் முக்கிய ஆலோசனையை மேற்கொள்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, அமித்ஷா என பாஜக மூத்த தலைவர்கள் […]
தருமபுரி: பாஜக தலையிலான NDA கூட்டணி சார்பாக தர்மபுரி பாமக வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிட்டார். தேர்தல் முடிவில் திமுக வேட்பாளர் மணியிடம் தோல்வி கண்டார். சௌமியா 4.11 லட்சம் வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் மணி 4.32 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இறுதி வரையில், வெற்றிக்கு அருகில் வந்து சிறு வாக்கு வித்தியாசத்தில் சௌமியா அன்புமணி தோல்வியை சந்தித்தார். சௌமியா அன்புமணி தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த […]
ஓபிஎஸ்: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த நிலையில், அதிமுகவினர் ஒன்றிணைய ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். அதிமுகவினருக்கு நேற்று சசிகலா அழைப்பு விடுத்துள்ள நிலையில் இன்று ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளாரான ஓபிஎஸ் தனது X தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்டு, ஜெயலலிதா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒற்றுமையால் மீட்டெடுக்க அறைகூவல். “ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை […]
சென்னை: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் துவங்கியது. ஜூன் 4 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியானது. இதற்கிடையில் மட்டுமல்லாது, தேர்தல் தேதி அறிவித்தது முதல் இன்று வரை தேர்தல் விதிகள் தமிழகத்தில் அமலில் இருக்கிறது. இந்த தேர்தல் விதிகள் எப்போது நிறைவடையும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த சூழலில், இதுகுறித்து நேற்று தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு நேற்று அளித்த பேட்டியில், ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது உட்பட பல்வேறு புகார்கள் அரசியல் கட்சிகளிடம் […]
மக்களவை தேர்தல் : 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில், இந்திய தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, பாஜக 240 இடங்களை வென்றதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாஜக தலைமையிலான NDA கூட்டணி, தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மோடிக்கு சீனா வாழ்த்து தெரிவித்துள்ளது. ஆரோக்கியமான மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, இந்தியாவுடன் இணைந்து பயணிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ள சீன வெளியுறவுத்துறை, “இரு நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டும், எதிர்காலத்தை மனதில் வைத்தும், […]
I.N.D.I.A கூட்டணி: மக்களவை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவி வருகிறது. பாஜக தலைமையிலான NDA கூட்டணி கட்சி தலைவர்களும், காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி தலைவர்களும் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில், முதலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆலோசனை கூட்டம், டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்றது. அதில் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகிய பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சியினரின் […]
டெல்லி: மக்களவை தேர்தலுக்கு பிறகு பல்வேறு அரசியல் மாற்றங்கள் இந்திய அரசியலில் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது. நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பாக அரசியல் களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. பாஜகவுக்கு இந்த முறை தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனை அடுத்து இன்று பாஜக தலைமையிலான NDA கூட்டணியின் அரசியல் தலைவர்கள் இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக […]
மக்களவை தேர்தல் : காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித்பால் சிங் மற்றும் இந்திரா காந்தியை கொலையாளிகளில் ஒருவரின் மகனுமான சரப்ஜீத் சிங் கல்சா பஞ்சாபில் வெற்றி பெற்று முதல் முறையாக பாராளுமன்றத்தில் நுழையவுள்ளனர். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அசாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அம்ரித்பால் சிங் சுயேச்சையாகப் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளருமான குல்பிர் சிங் ஜீராவை 1,97,120 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, கதாகூர் சாஹிப் தொகுதியில் வெற்றி பெற்றார். பஞ்சாபின் பரித்கோட் தொகுதியில் சுயட்சை […]
அண்ணாமலை : நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாநில தலைவர் அண்ணாமலை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்ததை தொடர்ந்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தேர்தலில் தோல்வி அடைந்தது பற்றியும், நாம் தமிழர் கட்சியை பாராட்டியும் பேசியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த போது அண்ணாமலை பேசியதாவது ” இந்த தேர்தலில் தோல்வி அடைந்ததை நான் தோல்வியாக பார்க்கவில்லை. வரும் 2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சியை […]
கோவை தொகுதி : மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40க்கு 40 என்ற சாதனையை திமுக படைத்துள்ளது. அதில், கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாநில தலைவர் அண்ணாமலை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காவிட்டாலும், மூன்றாவது முறையாக ஆட்சி […]
ரஜினிகாந்த் : சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு சென்றார். செய்தியாளர்களை சந்தித்த போது ” பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்ற திமுக தலைவர் எனது அருமை நண்பர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். மத்தியில் மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளதற்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். அதைப்போல, ஆந்திராவில் அமோக வெற்றி பெற்ற அருமை நண்பர் சந்திரபாபு நாயுடுவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனவும் […]
டெல்லி: மக்களவை தேர்தலுக்கு பின்னர் அதிகளவு பரபரப்பாக இயங்கி வரும் இடமாக டெல்லி தற்போது மாறி வருகிறது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தற்போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் (NDA), காங்கிரஸ் உள்ளடக்கிய இந்தியா (I.N.D.I.A) கூட்டணியும் இன்று டெல்லியில் வெவ்வேறு இடங்களில் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், சரத் பவார், அபிஷேக் பானர்ஜி ஆகியோர் கார்கே இல்லத்திற்கு வந்துள்ளனர். […]