தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு அனல்காற்று வீசும்!

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசுமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஆம்பன் புயல் தமிழகத்தை விட்டு விலகி சென்றதால், ஏற்கனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஆம்பன் புயல், கரையை கடக்கும் பொது தமிழகத்தில் உள்ள ஈரக்காற்றை இழுத்து சென்றதால் தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நேற்று தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதமடித்தது. மேலும், மன்னர் வளைகுடா பகுதியில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால், இன்னும் 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025