CMStalin TN [ImageSource-ANI]
கழிவுநீர் தொட்டிகளை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபடுவோரை தொழில் முனைவோராக மற்ற ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவிப்பு.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கழிவுநீர்த் தொட்டிகள் மற்றும் பாதாளச் சாக்கடைகளில் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கழிவுநீர் தொட்டிகளை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் உயிரிழப்பை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த பட்ஜெட் உரையில், கழிவுநீர் தொட்டிகளை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபடுவோர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் பொருட்டு. “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்” என்ற புதிய திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக, சென்னை பெருநகரப் பகுதியில் நவீன இயந்திரங்களையும், கருவிகளையும் பயன்படுத்தி, தூய்மைப் பணியாளர்களைத் தொழில்முனைவோர்களாக மாற்றி, கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தினை அடுத்த நான்கு மாதங்களில் முழுமையாக செயல்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என்று நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், இந்தப் புதிய திட்டத்திற்காகக் காத்திராமல், இனிமேல் தமிழ்நாட்டில் எந்தவொரு இறப்பும், கழிவுநீர் சுத்திகரிப்பால் நேரக்கூடாது என்பதை மனதில் கொண்டு, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பேரூராட்சித் துறை அலுவலர்கள் செயல்பட வேண்டும் என்று இந்தத் தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…