ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர்உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இது குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தூத்துக்குடிக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூற சென்றபோது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, போராட்டத்தில் சமூக விரோதிகள் போராட்டத்தில் உள்ளே புகுந்துள்ளனர். தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகமாகி விட்டனர் எனக் கூறினார்.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு 2-வது முறையாக சம்மன் அனுப்பியது அருணா ஜெகதீசன் ஆணையம். ஜனவரி 19-ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள விசாரணை ஆணையத்தில் ரஜினி ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…