வன்னியருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து 4 நாள்கள் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, பல மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பாமகவினர் போராட்டத்தில்கலந்துகொள்ள சென்னை நோக்கி வந்தனர். இதைத்தொடர்ந்து, போலீசார் சென்னை பெருங்களத்தூரில் இந்த போராட்டத்தில் முக்கிய நிர்வாகிகளை தவிர மற்ற பாமக உறுப்பினர்களை நகருக்குள் அனுமதிக்கவில்லை.
அப்போது பாமகவினர் சிலர் அருகில் இருந்த ரயில் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். மேலும், தண்டவாளத்தில் இரும்பு கம்பியை வைத்தனர். இந்நிலையில், பாமக நடத்திய போராட்டத்தின் போது பொது மக்களுக்கு இடையூறு, பொது சொத்துக்களை சேதம் விளைவித்ததாக பத்திரிக்கையாளர் வாராஹி சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையிட்டுள்ளார். மேலும், போராட்டம் நடத்திய வன்னியர் சங்கத்தை தடை செய்யவும், போராட்டத்திற்கு அழைப்புவிடுத்த ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வாராஹி கோரிக்கையும் வைத்தார்.
இதைத்தொடர்ந்து, முறையீட்டை மனு தாக்கல் செய்தால் எந்த அமர்வு விசாரிக்கும் என்பதை பதிவுத்துறை முடிவெடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…