புரெவி புயலானது மணிக்கு 18 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று இரவு புரெவி புயலாக வலுப்பெற்றது. இன்று பாம்பனுக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 420 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கு வடகிழக்கே சுமார் 600 கி.மீ தொலைவிலும் ” புரெவி புயல்” நிலைகொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த புயலானது மணிக்கு 18 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்காக நகர்ந்து மணிக்கு 80 முதல் 90 கிமீ வேகத்தில் 100 கிமீ வேகம் வரை புயல் காற்று வீசக் கூடும். இன்று மாலை அல்லது இரவில் மேற்கு நோக்கி நகர்ந்து,டிசம்பர் 3-ஆம் தேதி காலை மன்னார் வளைகுடா பகுதியை அடையக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3-ஆம் தேதி இரவு அல்லது டிசம்பர் 4-ஆம் தேதி அன்று அதிகாலை மேற்கு தென்மேற்காக நகர்ந்து கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையில் கரையை கடக்கும் என தெரிய வருகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…