பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
இந்நிலையில்,134 வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.சென்னையில் கடந்த 2 மாதங்களும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து வருகிறது.
இதனிடையே,உக்ரைன் ரஷ்ய போர் காரணமாக இந்தியா வாங்கும் ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 130 டாலர்களுக்கும் மேலாக அதிகரித்து காணப்பட்டது.
இதன் காரணமாக பெட்ரோல்,டீசல் விலை இனி வரும் நாட்களில் லிட்டருக்கு ரூ.25 வரை கடுமையாக உயரலாம் என தகவல் வெளியானது. இதனால்,வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் இருந்தனர்.
இந்நிலையில்,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலர்களுக்கும் கீழ் குறைந்துள்ளது.மேலும்,ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில்,இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்’ முதற்கட்டமாக 35 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே,இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை உயராது என எதிர்பார்க்கப்படுகிறது.இது வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதலாக அமைந்துள்ளது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…