பள்ளிக்கல்வித்துறையின் குரூப் ஏ, குரூப் பி அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் டேவிட் லியோ என்பவர், தனக்கு வழங்கப்பட்ட இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் விசாரித்தார்.
அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் போதுமான அளவு அதிகாரிகளை கொண்டு, சிறப்பு குழுக்களை அமைத்து தரவுகளை உரிய முறையில் சேகரித்து, ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பள்ளிக்கல்வித்துறையில் நடைபெறும் ஊழல்களை தடுக்க, போதுமான காவல்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று, தமிழக காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறிப்பாக பள்ளிக்கல்வித்துறையின் குரூப் ஏ, குரூப் பி அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். அவர்களின் சொத்துக்களை ஆய்வு செய்து பணிப்பதிவேட்டில் குறிப்பிட வேண்டும் என்றும், அவற்றில் முறைகேடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், சட்டவிதிகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…