குறைந்தது இத்தனை தொகுதிகள்., ஒரு எம்பி சீட்டு., அதிமுகவிடம் தேமுதிக கேட்கும் தொகுதிகள் பட்டியல்.!

Published by
பாலா கலியமூர்த்தி

அதிமுக கூட்டணியில் தேமுதிக கேட்கும் 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் அதிமுக – தேமுதிக இடையே சுலபமான முடிவு எட்டப்படவில்லை, தொடர் இழுபறி நீடித்து வரும் நிலையில், திடீரென தேமுதிக சுதீஷ் பொதுக்குழு கூட்டத்தில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன்பின் அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா என்ற கேள்வி எல்லோரிடமும் எழுந்தது.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக கேட்கும் 20 தொகுதிகளின் உத்தேச பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது அதிமுக கூட்டணியில் குறைந்தது 15 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும் ஒரு ராஜ்யசபா சீட்டு வழங்க வேண்டும் எனவும் தேமுதிக வலியுறுத்தியாக தகவல்  கூறப்படுகிறது. இதையடுத்து நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற இருந்தது. ஆனால், பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

இன்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள் என்று தேமுதிக நிர்வாகிகள் எதிர்பார்த்து கொண்டியிருக்கின்றனர். இதனிடையே, கடந்த பேச்சுவார்த்தையின்போது போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் கொடுக்கப்பட்டது. அதன்படி, விருகம்பாக்கம், ஆலந்தூர், ராணிப்பேட்டை, ஆம்பூர், அரக்கோணம், விருதுநகர், விருத்தாச்சலம், ஈரோடு கிழக்கு, சேலம் வடக்கு, சோளிங்கர், தருமபுரி, ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், திருவள்ளூர், திருத்தணி, மதுரை மத்தி ஆகிய தொகுதிகளை தேமுதிக கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மேட்டூர், மயிலாடுதுறை, பண்ருட்டி, பேராவூரணி ஆகிய தொகுதிகளும் தேமுதிக விருப்ப பட்டியலில் உள்ளது என்று தகவல் கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கபடும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

8 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

9 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

9 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

10 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

11 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

11 hours ago