அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க சென்ற பாலமுருகன் என்பவர் மாடு முட்டி உயிரிழந்துள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பாலமுருகன் என்பவர் மீது மாடு முட்டி உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி பாலமுருகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…