தர்ம சாஸ்தா சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி மாத பூஜைகளுக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. இன்று மாலை திறக்கப்பட்டு வரும் 18ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும் என்றும், கொரோனா வைரஸ் பீதியைத் தொடர்ந்து பக்தர்கள் வர வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டும், கேரள அரசும் ஏற்கனவே பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேபோல், சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என்று ஏற்கனவே கேரள அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதேபோல் பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் பக்தர்கள் தங்குவதற்கு அறைகள் வழங்கப்பட மாட்டாது. அப்பம், அரவணை கவுண்டர்கள் செயல்படாது எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களின் வருகை வெகுமளவு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா பீதிய்யால் கடவுளை வணங்க காண முடியாதது மிகவும் வருத்தம் அளிப்பதாக ஐயப்ப பக்தர்கள் கருதுகின்றனர்.
பீகார் : மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…
கேரளா : மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி கோவிந்தசாமி இன்று 25 அடி உயர…
சென்னை : அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் மற்றும் அவரது கங்கை வெற்றியின் ஆயிரமாவது ஆண்டு…
டெல்லி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (MIB), ULLU, ALTT, Big Shots, Desiflix, Hulchul, NeonX VIP…
ஜெய்ப்பூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயால் மீது, ராஜஸ்தானைச் சேர்ந்த 17…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜூலை 23, 2025 அன்று வாஷிங்டனில் நடந்த செயற்கை நுண்ணறிவு (AI)…