ADMK Former MInister Jayakumar [Image source : India Today]
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பாஜக பிரமுகர் கரு.நாகராஜ் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் முன்னாள் முதல்வர்கள் ஊழல் செய்த குற்றத்திற்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்து இருந்தார். இந்த பேட்டியால் அதிமுக தரப்பில் மிகுந்த எதிர்ப்பை சந்தித்து வருகிறார் அண்ணாமலை. இந்த கருத்து குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் மத்தியில் நேற்று பேசுகையில், அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். கூட்டணி தர்மத்தை மீறி பேசுகிறார். அவர் மாநில தலைமைக்கு தகுதி இல்லாதவர். அண்ணாமலையின் பேச்சு அதிமுக – பாஜக கூட்டணி தொடரக்கூடாது என்பது போல் இருக்கிறது. அண்ணாமலைக்கு வரலாறு தெரியாது. பாரம்பரியம் தெரியாது. என காரசார விமர்சனங்களை அண்ணாமலை மீது ஜெயக்குமார் முன் வைத்து இருந்தார்.
இதனை தொடர்ந்து தமிழக பாஜக துணை தலைவர் கரு நாகராஜன் ஜெயக்குமாருக்கு தனது கண்டன அறிக்கையை பதிவிட்டு உள்ளார். அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பற்றி பேசுவதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எந்த தகுதியும் கிடையாது. எங்கள் தலைவர் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதில் உறுதியாக இருக்கிறார். தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். தமிழர்களின் நலனுக்காக மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் தமிழக அரசியலை சரி செய்ய வேண்டும் என உறுதியாக இருக்கிறார். பதவிக்கும் பரிசுக்கும் ஆசைப்பட்டு அவர் அரசியலுக்கு வரவில்லை. மக்கள் நலம் பெற வேண்டும் என கனவுகளோடு அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார்.
ஜெயக்குமார் போன்ற அரசியல்வாதிகள் தான் தங்களை நேர்வழிக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். இது போன்ற பேட்டிகளால் பாதிப்பு அதிமுகவுக்கு தான். கூட்டணி என்பது எல்லோரும் இணைந்து தான் செயல்பட வேண்டும். இதில் யாருக்கும் பெரியண்ணன் வேலை கிடையாது என கரு நாகராஜன் தனது அறிக்கையில் பதிவிட்டுள்ளார்.
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…