ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து தூத்துக்குடியில் நாளை வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம்.
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் அனுமதி வழங்கவேண்டும் என கூறி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் செய்தது.
பின்னர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிப்பது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட்டை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை இயங்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், இன்று தூத்துக்குடி ஆட்சியரை ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சந்தித்தனர். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மீண்டும் கூட்டி ஸ்டெர்லைட்க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி நீதிமன்றத்தில் அளிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஆட்சியரை சந்தித்த பிறகு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அரிராகவன் நாளை ஒருநாள் தூத்துக்குடியில் கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…