தமிழ்நாடு

#BREAKING : பொதுமக்கள் கவனத்திற்கு..! 300 நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை..! – முதல்வர்

Published by
லீனா

300 நியாய விலைக்கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுப்படுத்தப்படும் என முதல்வர் அறிவிப்பு. 

தக்காளி விலை உயர்வையடுத்து, 60 ரேஷன் கடைகளில் தக்காளியின் விற்பனை நடைபெற்று வரும் நிலையில், மேலும் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று 110:7:2023) தலைமைச் செயலகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் தொடக்கத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த சில வாரங்களாக சில குறிப்பிட்ட வகை மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை நிலவரத்தினை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதை தொடர்ந்து கூட்டுறவுத் துறை சார்பாக தக்காளி விலையினை கட்டுப்படுத்த சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்து, இதனை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

இது தொடர்பாக அரசின் பல்வேறு துறையைச் சார்ந்த அலுவலர்கள் காய்கறி உள்ளிட்ட குறிப்பிட்ட வகை மளிகைப் பொருட்கள் அனைத்து கூட்டுறவு சங்க அங்காடிகளிலும் நியாயவிலைக் கடைகளிலும், சந்தை விலையை விட குறைவாகக் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் தேவைப்பட்டால் இதற்கென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் மேற்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினார்.

அதேசமயம் அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கப்படுவதைத் கடுமையாகக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை இதில் கூடுதல் கவனம் செலுத்திடவும் கேட்டுக் கொண்டார். அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தினார். மேலும், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேளாண் துறை அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தவேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

கோவிட் காலத்தில் செயல்படுத்தப்பட்டது போல நடமாடும் காய்கறி அங்காடிகளை தற்போதும் தேவைப்படும் இடங்களில் மாநகராட்சி மற்றும் தோட்டக்கலை துறை மூலம் தொடங்கவும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது. மாநிலம் முழுவதும் செயல்படும் பண்ணை பசுமை அங்காடிகள் மூலம் கூடுதலாக தக்காளி சிறியவெங்காயம் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படும் என்றும், வெளிச்சந்தை விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள் மூலம் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு போன்றவை சந்தை விலையைவிட குறைவான உ விலையில் விற்பனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

300 நியாய விலைக்கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுப்படுத்தப்படும். நடமாடும் காய்கறி அங்காடிகள் வாயிலாக நகரப் பகுதிகளில் காய்கறிகள் விற்பனை மேற்கொள்ளப்படும் என்றும், மாநிலம் முழுவதும் செயல்படும் உழவர் சந்தைகளில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் தக்காளி சிறியவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

11 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

12 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

12 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

13 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

13 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

14 hours ago