ஏபிவிபி தலைவர் சுப்பையாவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டி ஒருவரின் வீட்டின் முன் அநாகரிகமாக நடந்த விவகாரத்தில் ஏபிவிபி தலைவர் சுப்பையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பயன்படுத்திய முக கவசத்தை வீசியும், சிறுநீர் கழித்தும் பக்கத்து வீட்டு பெண்மணிக்கு இடையூறு செய்த வழக்கில் மருத்துவர் சுப்பையா சண்முகம் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சுப்பையா மனு தாக்கல் செய்திருந்தார். இதனால் சுப்பையா சண்முகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் ஏற்கனவே வழங்கியது.
இந்த நிலையில், ஏபிவிபி தலைவர் சுப்பையாவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேவைப்படும் போது விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனை விதித்து சுப்பையாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்மணி வழக்கை தொடர விரும்பவில்லை என நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தாக கூறப்படுகிறது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…