உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தை,தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்துள்ளார்.
கடந்த 28-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்திற்கு திடிரென தலை சுற்றல், மயக்கம் ஏற்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கழுத்து பகுதி வழியாக மூளை மற்றும் முகம், இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கூறப்பட்டது.
இதையடுத்து, ரஜினிக்கு ரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. சிறப்பு மருத்துவ குழுவினர் தொடர்ந்து ரஜினிகாந்தின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். மூன்றாவது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தின் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவ குழு தெரிவித்தது.
ரஜினிக்கு எடுக்கப்பட்ட அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளிலும் அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் ரஜினி நன்றாக பேசுவதோடு, உணவு எடுத்துக் கொள்கிறார் மற்றும் அன்றாட பழக்கங்களை செய்கிறார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே,ரஜினிகாந்த் ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தை,தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து நலம் விசாரித்துள்ளார்.
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் குறித்து உரையாற்றினார்.…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜூலை 30, 2025) சென்னை பனையூரில்…
திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…