#BREAKING: இன்று தமிழகத்தில் 6,986 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

இன்று தமிழகத்தில் புதிதாக 6,986 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதையடுத்து, இன்று 6,986 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 2,13,723 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 5,471 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை கொரோனாவில் இருந்து 1,56,526பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,155 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 94,695 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,494 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 75 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025