தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியது. உயிரிழப்பின் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 624 பேர் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 9,989 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா கண்டறியப்பட்ட 759 பேரில் 13 பேர் வெளிநாடு சென்று வந்தவர்கள் என்றும் 37 பேர் வெளிமாநிலம் சென்று வந்தவர்கள் என்றும் கூறியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, இன்று 363 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 15,512 பேரில் 7491 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் இன்று 5 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தற்போது 7,915 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ஒரே நாளில் 12,155 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3,97,340 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…