பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது.
பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டது.
மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள பாடகர் எஸ். பி. பிக்கு உயிர்காக்கும் எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், வென்டிலேட்டர் மூலம் அவரது உடல்நிலை குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல்நிலை குறித்து அவரது மகன் சரண் தினமும் வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இன்று சரண் வெளியிட்டு உள்ள வீடியோவில், நுரையீரல் தொற்று குணமடைய சிறிது காலம் தேவைப்படுவதால் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை தொடர்கிறது.
ஐபேடில், கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளை பார்த்து வருகிறார். எஸ்.பி.பி., தான் பேச நினைப்பதை எழுதி காண்பிக்கிறார் என மகன் சரண் தெரிவித்தார். மேலும், தந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என வந்துள்ளது என தெரிவித்தார்.
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…