#BREAKING: கொரோனா விதிமுறைகள் – கட்சிகளுக்கு நீதிமன்றம் அறிவுரை

கொரோனா தடுப்பு விதிகள் பற்றி வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.
தேர்தல் பரப்புரை, வாக்குபதிவின் போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, தேர்தல் நடவடிக்கைகளின் போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் தேர்தல் பரப்புரையின்போது கொரோனா தடுப்பு விதிகள் பற்றி வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் வேட்பாளர்கள் பொறுப்புடன் செயல்படவும் எனவும் கூறி அனைத்து அரசியல் கட்சியின் வேட்பாளர்களுக்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025