சென்னை ஐஐடியில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 30ஆக உயர்வு என தகவல்.
சென்னை கிண்டியிலுள்ள ஐஐடியில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 18 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 666 பேருக்கு பரிசோதனை செய்ததில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னை ஐஐடியில் மாணவர்கள் உள்பட 12 பேருக்கு தொற்று உறுதியானது என மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
கொரோனா உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நேற்று 365 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதில் 12 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று மேலும் 666 பேருக்கு பரிசோதனை செய்ததில் 18 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 300ஆக அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், தற்போது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மருத்துவத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…