#Breaking: தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா.!

தமிழகத்தில் இன்று மேலும் 447 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை இதுவரை 9,674 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனாவால் 9,227 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 9,674 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 363 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 5,625 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. இன்று 64 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 2,240 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025