உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 9-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாணவர்களை மீட்பதற்கான தமிழக அரசின் குழுவுக்கு வெளியுறவு அமைச்சகம் அனுமதி வழங்க வேண்டும் என நேற்று கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க உருவாக்கப்பட்ட தமிழக குழு நாளை காலை 11 மணிக்கு டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கிறார்கள். இந்த சந்திப்பின் போது, உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க அமைத்த சிறப்பு குழுவுக்கான அதிகாரிகள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த குழுவில் ஐஏஎஸ் அதிகாரிகள் கமல் கிஷோர், பிரதீப்குமார், அஜய் யாதவ், கோவிந்தராவ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், தமிழக அரசு நியமித்த குழுவில் மூன்று எம்பிக்களும், ஒரு எம்எல்ஏ-வும் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்டமான…
அரியலூர் : பெரம்பலூரை தொடர்ந்து அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும்,…
பெரம்பலூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி க. பழனிசாமி, இன்று பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் “மக்களைக் காப்போம்,…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் ''வேட்டுவம்'' படப்பிடிப்பின் போது சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக…
மும்பை : நீண்டகாலக் காத்திருப்புக்கு பின், பிரபல மின்சார கார் உற்பத்தியாளர் டெஸ்லா இந்தியாவில் இன்று (ஜூலை 15) அதிகாரப்பூர்வமாக…