இந்தியாவுக்கு வந்தது டெஸ்லா ஷோரூம்.. கார் விலை என்ன தெரியுமா.?
எலான் மஸ்க்-ன் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ளது

மும்பை : நீண்டகாலக் காத்திருப்புக்கு பின், பிரபல மின்சார கார் உற்பத்தியாளர் டெஸ்லா இந்தியாவில் இன்று (ஜூலை 15) அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. மும்பையின் பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் பி.கே.சி.யில் உள்ள மேக்கர் மேக்ஸிட்டி மாலில் டெஸ்லாவின் முதல் ஷோரூம் வாடிக்கையாளர் பார்வைக்கு வைக்கப்பட்டது.
முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் டெஸ்லா ஷோரூமைத் திறந்து வைத்தார். இந்தியாவில் டெஸ்லாவின் முதல் மாடல் Model Y ஆகும், இது இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. மேலும், இந்தியாவில் டெஸ்லாவின் இரண்டாவது ஷோரூம் இந்த மாத இறுதியில் புதுதில்லியில் திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் Y மாடல் 44,990 டாலரில் தொடங்கும் விலையானது, இந்தியாவில் 100 சதவீத இறக்குமதி வரியுடன் சேர்த்து ரூ.60 லட்சமாக விற்கப்படுகிறது.
View this post on Instagram
இந்த ஆண்டின் தொடக்கத்தில், டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஊழியர்களை பணிக்கு நியமிக்கத் தொடங்கியது, அதன் பிறகு டெஸ்லா இந்திய சந்தையில் நுழைவது குறித்த விவாதங்கள் தொடங்கின. டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் முன்பு இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்திருந்தார், ஆனால் இந்தியாவில் விதிக்கப்பட்ட அதிக இறக்குமதி வரி மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பதாக அவர் கூறியிருந்தார்.
இருப்பினும், இந்திய அரசாங்கம் சமீபத்தில் ஒரு புதிய மின்சார வாகனக் கொள்கையை அறிவித்தது. இது உகளாவிய மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு பல வசதிகளையும் குறைந்த இறக்குமதி வரியையும் வழங்குகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், டெஸ்லா வரும் காலத்தில் இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தித் துறையிலும் நுழைய வாய்ப்புள்ளது.
Model Y Rear-Wheel Drive (RWD):
- எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.59.89 லட்சம்
- ஆன்-ரோடு விலை: சுமார் ரூ.61 லட்சம்
- ரேஞ்சு: 500 கி.மீ (கூறப்பட்டவை)
- டாப் ஸ்பீடு: 201 கி.மீ/மணி
- 0-100 கி.மீ/மணி: 5.9 வினாடிகள்
Model Y Long Range Rear-Wheel Drive (RWD):
- எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.67.89 லட்சம்
- ஆன்-ரோடு விலை: சுமார் ரூ.69.15 லட்சம்
- ரேஞ்சு: 622 கி.மீ (கூறப்பட்டவை)
- டாப் ஸ்பீடு: 201 கி.மீ/மணி
- 0-100 கி.மீ/மணி: 5.6 வினாடிகள்