#Breaking:திமுக பிரமுகர் வெட்டிக்கொலை – 5 பேர் நீதிமன்றத்தில் சரண்!

Published by
Edison

சென்னை:பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் சௌந்தரராஜன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை வியாசர்பாடியில் 59-வது வட்ட கழக செயலாளராக இருந்தவர் சௌந்தரராஜன்.இந்த நிலையில்,சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் சௌந்தரராஜன் நேற்று வெட்டிகொலை செய்யப்பட்டார்.பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலுக்கு சௌந்தரராஜன் தண்ணீர் கொண்டு வந்தபோது அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது.

சிசிடிவி காட்சிகளில் சிக்கிய ஆதாரம்:

இதனைத் தொடர்ந்து,பேருந்து நிலையத்தில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக எஸ்பிளனமேடு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.அதனடிப்படையில் பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது.அப்போது கொலையாளிகள் ஆட்டோவில் தப்பி சென்ற காட்சி பதிவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

5 பேர் நீதிமன்றத்தில் சரண்:

இந்நிலையில்,திமுக பிரமுகர் சௌந்தரராஜன் கொலை வழக்கில் கார்த்திக் குமரேசன்,சதீஷ், இன்பா,அதிமுக பிரமுகர் கணேஷன்  மற்றும் அவருடைய மகன் தினேஷ் ஆகிய 5 பேர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.மேலும்,இந்த கொலை வழக்கு தொடர்பாக வசந்த குமார் என்பவர் கைதாகியுள்ளார்.

கொலைக்கான காரணம்:

பிராட்வே பேருந்து நிலையத்தில் இதற்கு முன்பாக அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.பின்னர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சௌந்தரராஜன் இணைந்த பிறகு,திமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்துள்ளார்.இதனால்,அதிமுக பிரமுகர் கணேஷனுக்கும்,சௌந்தரராஜன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில்,சௌந்தரராஜன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Recent Posts

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

24 minutes ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

46 minutes ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

2 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

2 hours ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

3 hours ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

3 hours ago