டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதுபோல குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் பல்வேறு முறைகேடுகள் அம்பலமான நிலையில் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு முறையில் 6 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இணையத்தில் வெளியிடப்படும்:
தேர்வு எழுதும் நபர்களின் விவரம் முழுமையாக இணையதளத்தில் வெளியிடப்படும்.
விடைத்தாள் நகல்களை பெறலாம் :
தேர்வு நடவடிக்கைகள் முடிந்த பின்னர் தேர்வர்களின் விடைத்தாள் நகல்களை இணையதளம் மூலமாக உரிய கட்டணம் செலுத்தி விடைத்தாள் நகல்களை பெற்றுக் கொள்ளலாம்.இம்முறை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
விவரங்கள் வெளியிடப்படும் :
நிரப்பப்பட்ட இடங்கள் மற்றும் காலியாக உள்ள இடங்களின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வு எழுதும் மையம் :
தேர்வு எழுதும் மையங்களை தேர்வாணையமே இனி தேர்வு செய்யும்.
ஆதார் கட்டாயம் :
ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்வதை தடுக்க ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது.தேர்வர்களின் கைரேகை பெறப்பட்டு ஆதாருடன் ஒப்பிட்ட பிறகே இனி தேர்வெழுத அனுமதி அளிக்கப்படுவர்.
தொழில்நுட்பத் தீர்வு :
முறைகேடுகள் இருப்பின் முன்கூட்டியே கண்டறியும் உயர் தொழில்நுட்பத் தீர்வு நடைமுறைப்படுத்தப்படும்.
சென்னை : இன்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும்…
சென்னை : இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர்…
சென்னை : இந்தியாவின் பிரபல பால் பிராண்ட்டாக திகழும் அமுல் தனது பால் விலையை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு மே…
சென்னை: இன்று (மே 1, 2025) உலக உழைப்பாளர் தினம் (International Workers' Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்…
டெல்லி : ஒவ்வொரு புதிய மாதம் தொடங்கியதும், மாதத்தின் முதல் நாள் அன்று பல மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன. வழக்கமாக…
ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 இன் 50வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…