#Breaking:”1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம் – தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் ..!

Published by
Edison

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்,தற்போது தொடங்கி வைத்துள்ளார்.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  அவர்கள், தமிழகத்தில் உள்ள 1 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்றும், புதிய மின் இணைப்புக்காக, தமிழகத்தில் 4.52 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்,தற்போது தொடங்கி வைத்துள்ளார். முதற்கட்டமாக 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்குவதற்கான ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

இதனையடுத்து,பேசிய முதல்வர்:”அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவில்லை, பொறுப்பேற்றுள்ளேன்.கடந்த 2006 -11 திமுக ஆட்சி காலத்தில் 2,09,910 பேருக்கு புதிய மின் இணைப்புகள் தரப்பட்டது.கடந்த 2006 – 2011 திமுக ஆட்சி காலத்தில் 2,09,910 பேருக்கு புதிய மின் இணைப்புகள் தரப்பட்டது.

ஆனால்,அதிமுக ஆட்சியில் 2011 – 2016 காலத்தில் 82,987 பேருக்கும், 2016-21 காலக்கட்டத்தில் 1,38,592 பேருக்கும்தான் புதிய மின் இணைப்புகள் தரப்பட்டன.அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்குமான வேறுபாடு என்பது இதுதான்.மின்சார வாரியத்தை அதிமுக ஆட்சி சீரழித்து விட்டது. நாட்டிலேயே விரைவாக  செயல்படக் கூடியது திமுக அரசுதான்.குறிப்பாக, திமுக உழவர்களுக்கான அரசு.ஏனெனில்,அமைச்சர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு தங்களது பணிகளை செய்து வருகின்றனர்.

மேலும்,1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை மாதம் 25 ஆயிரம் என்று நான்கு மாதத்திற்குள் நிறைவேற்றப்படும்.சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்புக்கு முன்னுரிமை வழங்க இருக்கிறோம்.அதன்படி,திருவாரூரில் முதல் சூரிய சக்தி மின்பூங்கா அமைக்கப்படவுள்ளது.புதிய மின் திட்டங்களை திட்டமிட்டுள்ளோம். 17,980 மெகா வாட் மின்சாரத்தை வரும் 10 ஆண்டு காலத்தில் தயாரிக்க திட்டப்பணிகள் தொடங்கி இருக்கிறது.”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

நெல்லை கொலை : பெற்றோர் தூண்டுதலில் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை கொலை : பெற்றோர் தூண்டுதலில் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…

53 minutes ago

சச்சினின் சாதனையை முறியடிப்பதில் கவனம் செலுத்த போவதில்லை – ஜோ ரூட் சொன்ன பதில்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…

1 hour ago

AI பயன்படுத்த போறோம்…12,000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS?

மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…

2 hours ago

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : மக்களவையில் இன்று 16 மணி நேரம் விவாதம்!

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…

3 hours ago

தினமும் 10 மணி நேரம் நிறுத்திக்கொள்கிறோம்! காசாவில் கருணை காட்டிய இஸ்ரேல்!

ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…

4 hours ago