#BREAKING : சமூகநீதி கூட்டமைப்பில் இணைய விரும்பவில்லை…! முதல்வருக்கு ஓபிஎஸ் கடிதம்..!

Published by
Castro Murugan

அரசியல் ஆதாயத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள சமூகநீதி கூட்டமைப்பில் இணைய அதிமுக விரும்பவில்லை என முதல்வருக்கு ஓபிஎஸ் கடிதம். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உள்ளிட்ட 37 அரசியல் தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து  முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அரசியல் ஆதாயத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள சமூகநீதி கூட்டமைப்பில் இணைய அதிமுக விரும்பவில்லை. ஒரு அமைப்பை தொடங்குவதற்கு முன் ஒத்த கருத்து கொண்டவர்களை அழைத்துப் பேசி விவாதிக்க வேண்டும். விவாதிக்காமல் அமைப்பை ஏற்படுத்தி விட்டு பிரதிநிதியை நியமிக்க கூறுவது கூட்டாட்சிக்கு முரணாக உள்ளது.

 தங்களின் கடிதத்தை துருவித்துருவி பார்த்தபோது தமிழக மக்களின் நலன் எதுவும் இல்லை. நேரத்தை வீணடிப்பதை தவிர்த்து நீட் போன்ற மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள். சமூகநீதியில் தான் இப்படி எனில் கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்துவதிலும்  திமுக பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

Recent Posts

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

12 minutes ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

1 hour ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

2 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

10 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

10 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago