மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுப்பு தெரிவித்ததாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் பாபு மனோகர் திடீர் தகவலை தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், இன்று முதல் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது. டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே தொடுக்கப்பட்ட வழக்கு காரணமாக 3 ஆண்டுகளாக ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடைபெறாமல் இருந்த நிலையில், இன்று முதல் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது.
இந்த சமயத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்போரின் அடிப்படையில் எய்ம்ஸ் இயக்குனரின் பரிந்துரைப்படி, 6 பேர் கொண்ட மருத்து குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆறுமுகசாமி ஆணையம் தொடர் விசாரணை மீண்டும் மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையின்போது மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுப்பு தெரிவித்ததாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் பாபு மனோகர் திடீர் தகவலை தெரிவித்துள்ளார்.
தனக்கு தினமும் 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறிய ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுப்பு தெரிவித்ததாகவும், கடந்த 2016-ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்கும் நாளுக்கு முன் ஜெயலலிதாவுக்கு தலை சுற்றல், மயக்கம் இருந்தது. அப்போது, சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு உடற்பயிற்சியை மேற்கொள்ளவும் பரிந்துரைத்தேன் எனவும் அப்போலோ மருத்துவர் கூறியுள்ளார். சிறுதாவூர் அல்லது ஊட்டி சென்று சில நாட்கள் ஓய்வு எடுக்க ஜெயலலிதாவுக்கு பரிந்துரைத்தேன் என்றும் விசாரணை ஆணையத்தில் மருத்துவர் பாபு மனோகர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மேலும், மருத்துவர் சிவகுமார் அழைத்ததின்பேரில் பதவியேற்புக்கு முந்தைய நாள் சென்னை போயஸ் கார்டன் தோட்டத்தில் ஜெயலலிதாவை சந்தித்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். யாருடைய துணையில்லாமல் நடக்க முடியாத சூழல் இருந்ததாகவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…