#Breaking: சென்னையில் மேலும் 567 பேருக்கு கொரோனா.!

சென்னையில் ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8,795 ஆக உயர்வு.
தமிழகத்தில் இன்று புதிதாய் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. இன்று 7 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. மேலும், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 6,282 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8,795 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மொத்தமாக 65 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 3048 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளதாக, 5681 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அஞ்சு கட்சி அமாவாசை செந்தில் பாலாஜி! பதிலடி கொடுத்து கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார்!
February 16, 2025
தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்! துணை முதல்வர் உதயநிதி எச்சரிக்கை!
February 16, 2025