தமிழகத்தில் ஒன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று வரை 3,550 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 4,058 ஆக அதிகரித்துள்ளது. இதில், சென்னையில் இன்று மட்டும் 279 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 2008 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் 2 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து இன்று மட்டும் 76 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 4,058 பேரில் 1,485 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பின்னர் இன்று ஒரே நாளில் 11,858 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,74,828 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 4,058 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வார்டில் 2,537 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இன்று சென்னைக்கு அடுத்து கடலூரில் 68 பேருக்கு கொரோனா உறுதியானது. இதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டில் தலா 38 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…