தமிழகத்தில் இன்று மேலும் 509 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 9,227 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனாவால் 8,718 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 9,227 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 380 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.
இதைத்தொடர்ந்து இன்று 42 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2176 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,79,467 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் மட்டும் 12,780 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 509 பேருக்கு கொரோனா உறுதியானது. இன்று கொரோனா கண்டறியப்பட்ட 716 பேரில் ஆண்கள் 288 பேர், பெண்கள் 221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா வார்டில் 6,984 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…