நீட் தேர்வு விடைத்தாள் முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகாமை அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி இணையதளத்தில் ஓ.எம்.ஆர் விடைத்தாள்களை வெளியிட்டது. அப்போது இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஓ.எம்.ஆர் விடைத்தாளில் தனது மதிப்பெண் 594 என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒரு வாரம் பின்னர் பதிவேற்றம் செய்யப்பட்ட ஓ.எம்.ஆர் விடைத்தாளில்248 மதிப்பெண்கள்மாற்றப்பட்டுவிட்டதாக கூறி கோவையை சார்ந்த மனோஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில் மதிப்பெண் மாற்றப்பட்ட ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் மனோஜ் வழங்கினார். இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வு விடைத்தாள் முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவு 3 மாதத்திற்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது.
யார் மீதும் வழக்கு பதிவு செய்யாமல், ஆரம்பக்கட்ட விசாரணை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், சைபர் கிரைம் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளை கொண்ட குழு விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…