Chennai High Court [Image source : Wikipedia]
மருத்துவ மேற்படிப்புகளில் சேரும் அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, மருத்துவ மேற்படிப்புகளில் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர, அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கும் தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஊக்க மதிப்பெண் வழங்குவதை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் குருபரன், சக்திவேல் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு அளித்துள்ளது. அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்குவது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனிடையே, தமிழக்தில் MD, MS போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் சேர 50% அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொதுப்பிரிவில் மீதமுள்ள 50% இடங்களுக்கு போட்டியிடும் அரசு மருத்துவர்களுக்கு 30% ஊக்க மதிப்பெண் வழங்குகிறது தமிழ்நாடு அரசு. கிராமம், தொலைதூரம் மற்றும் மலைப்பகுதிகளில் பணியாற்றுவதை ஊக்கப்படுத்தவே ஊக்க மதிப்பெண் வழங்கப்படுகிறது. 30% ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் என 2020ல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கு தொடர்ந்த நிலையில், தற்போது அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி ஆதிகேசவேலு அமர்வு மனுதாரரின் கோரிக்கை நிராகரித்தது.
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…